News October 21, 2025

நத்தம்: குடும்பப் பிரச்னையால் இளைஞர் தற்கொலை!

image

நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி சின்னமலையூரை சேர்ந்தவர் நாகராஜ்(22). இவரது மனைவி ஜெயலெட்சுமி(21). இவர்கள் குடும்பத்திற்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த நாகராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News October 22, 2025

திண்டுக்கல்: கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம்!

image

திண்டுக்கல் :நிலக்கோட்டை அருகே உள்ள அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(32). திருப்பூரில் கூலி வேலை செய்யும் இவருக்கு, அங்கு பப்லு எனும் வட மாநிலத்தைச் சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆறுமுகத்தின் வீட்டிற்கு வந்த பப்லு, அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 22, 2025

திண்டுக்கல்லில் 40 பேருக்கு தீக் காயம்!

image

தீபாவளியன்று கவனக்குறைவால் பட்டாசு வெடித்ததில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் காயமடைந்தனர். நிலக்கோட்டை, நத்தம், ஆத்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்துார், பழனி ஆகிய பகுதிகளில் 13 அரசு மருத்துவமனைகளில் 28, திண்டுக்கல் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் 12 பேர் என 40 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News October 22, 2025

கொடை: கர்ப்பிணி பெண்ணை தாக்கிய காட்டெருமை!

image

கொடைக்கானல்: ஏரிச்சாலை அருகே கன்றுடன் உலா வந்த காட்டெருமை திடீரென இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் 7 மாத கர்ப்பிணியான விஜி (27) மற்றும் அவரது கணவர் விக்கி (28) இருவரும் படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விஜி மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

error: Content is protected !!