News October 21, 2025
BREAKING: 8 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ வார்னிங்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தென் ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்திற்கு இன்று ‘Red Alert’ விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 22, 2025
4 மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று(அக்.22) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ வார்னிங் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழை நேரத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
News October 22, 2025
FLASH: மேலும் 4 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக மேலும் 3 மாவட்டங்களுக்கு இன்று(அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
News October 22, 2025
பெயரில் மாற்றம் செய்த ஹன்சிகா

ஹன்சிகாவின் விவாகரத்து சர்ச்சை ஒரு பக்கம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, அவர் திடீரென தன்னுடைய பெயரில் மாற்றம் செய்துள்ளார். அதாவது, ஆங்கிலத்தில் ‘Motwani’ என்பதை தற்போது ‘Motwanni’ என மாற்றம் செய்து இருக்கிறார். நியூமராலஜி படி பெயரை மாற்றினால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என ஹன்சிகா நம்புகிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.