News October 21, 2025
தொழுகை செய்த இடத்தை சாணத்தால் சுத்தம் செய்த BJP

புனேவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க Shaniwar Wada கோட்டை, மராத்திய கூட்டமைப்பின் தலைமையகமாக செயல்பட்டது. இந்நிலையில், இங்கு இஸ்லாமியர்கள் சிலர் தொழுகையில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜ்யசபா MP மேதா குல்கர்னி தலைமையிலான பாஜகவினர், புனிதத்தன்மையை மீட்கும் நோக்கில் தொழுகை செய்த இடத்தை பசு சிறுநீர் (கோமியம்) & சாணத்தை கொண்டு சுத்தம் செய்தனர்.
Similar News
News October 22, 2025
டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹங்கேரியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு பணிகளுக்கு இன்னும் நேரம் தேவைப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை தங்களிடம் வழங்க வேண்டும் என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
News October 22, 2025
இயக்குநரின் இரக்கமற்ற ட்வீட்.. கடும் எதிர்ப்பு

இந்தியாவில் ஒரு நாள் மட்டுமே தீபாவளி என்றும், காஸாவில் ஒவ்வொரு நாளுமே தீபாவளி எனவும் X-ல் இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவிட்டது சர்ச்சையாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காஸாவில் குழந்தைகள் உள்பட 68,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதனை தீபாவளி கொண்டாட்டத்துடன் ஒப்பிடும் ராம் கோபால் வர்மா மனிதனாக வளர்ச்சி பெற பல ஆண்டுகள் ஆகும் என்று சாடும் நெட்டிசன்கள், அவரை ஈவு இரக்கமற்றவர் என விமர்சித்துள்ளனர்.
News October 22, 2025
மழைக்காலத்தில் உதவும் டிப்ஸ்!

*மழைக்காலம் ஆரம்பித்தாலே, கொசுக்களின் ஆதிக்கமும் துவங்கி விடும். இதிலிருந்து தப்பிக்க, நெருப்பில், வேப்பிலை போட்டு, புகை போடலாம்.
*ஜில்லென்று இருக்கும் துணிகளை மடித்து, கம்பளியில் சுருட்டி, நான்கு மணி நேரம் கழித்து எடுத்தால், வெயிலில் காய வைத்தது போன்று மொட மொடப்பாக இருக்கும்.
*ஆடைகளில் சேறு படிந்தால், உருளைக்கிழங்கை நறுக்கி, சேறு உள்ள இடத்தில் தேய்த்து, பின், துவைத்தால், கறை மறைந்து போகும்.