News October 21, 2025
செங்கல்பட்டு: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News October 22, 2025
முத்தமிழ் முருகவேல் கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த, ஓட்டேரியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தமிழ் முருகவேல் முருகர் கோயிலில் இன்று (அக் 22) கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது. நாளை அக். 22 முதல் 27 வரை கந்த சஷ்டி பூஜைகள் நடைபெறும். மேலும் அக் 27 ம்தேதி சூரசம்காரமும், 28ம் தேதி முருகருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News October 21, 2025
செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல்பட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை(அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)
News October 21, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்டோபர்-21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.