News October 21, 2025
வேலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News October 22, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News October 21, 2025
உயிர் நீத்த காவலர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (அக் -21) காவலர் வீர வணக்கம் நாளை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த காவல்துறை சேர்ந்தவரின் வாரிசுகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் நியமன பணி ஆணையினை வழங்கினார். உடன் மாவட்ட காவல் அதிகாரிகள், உயிர்த்தியாகம் செய்த காவலர்களின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
News October 21, 2025
வேலூர்: ஒரே நாளில் 20 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்!

தீபாவளி பண்டிகையொட்டி பொதுமக்கள் பலர் கடந்த 2 நாட்களாக பட்டாசுகள் வெடித்து வருகின்றனர். இதனால் சாலைகள், தெருக்களில் பட்டாசு குப்பைகள் குவிந்தது. இதையடுத்து வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று (அக்.21) ஒரே நாளில் 20 டன் பட்டாசு குப்பைகளை அகற்றியுள்ளனர் என திகரிகள் தெரிவித்தனர்.


