News October 21, 2025

காவலர் நினைவுச் சின்னத்தில் CM ஸ்டாலின் மரியாதை

image

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னை டிஜிபி வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து CM ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வீர மரணமடைந்த காவலர்களுக்கு ராயல் சல்யூட் அடித்த CM, இதனையடுத்து மரக்கன்றையும் நட்டார். அதன் பின்னர், காவல்துறையில் கருணை அடிப்படையில் நியமனம் பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். #PoliceCommemorationDay

Similar News

News October 21, 2025

நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை லீவு விடப்பட்டுள்ளது.

News October 21, 2025

கணவர் இல்லாமல் தீபாவளி கொண்டாடிய ஹன்சிகா

image

தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை ஹன்சிகா மோத்வானி பகிர்ந்துள்ளார். அந்த கொண்டாட்டங்களில், அவரது கணவர் இல்லாதது தெரியவந்துள்ளது. சொஹைல் கதுரியா என்பவரை கடந்த 2022-ல் ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஹன்சிகா வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் அது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

News October 21, 2025

விழுப்புரத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கையாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!