News October 21, 2025
கிருஷ்ணகிரி: காவலர்களுக்கு மரியாதை செலுத்திய ஆட்சியர்

அக்டோபர் 21 அன்று அனுசரிக்கப்படும் காவலர்கள் வீர வணக்க தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் காவலர் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நாடு முழுவதும் உயிரிழந்த 191 காவலர்களுக்கு அணிவகுப்பு&துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Similar News
News October 22, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசால் பாா்வைக் குறைபாடுடைய மாணவா்களுக்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள கணினி ஆபரேட்டா் மற்றும் புரோகிராமிங் உதவியாளா் பயிற்சிக்கு சோ்க்கை நடைபெற உள்ளது. இதில், 12 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அறிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (21.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News October 22, 2025
கிருஷ்ணகிரி: நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்

ஊத்தங்கரையிலிருந்து டாட்டா ஏசி வாகனம் இன்று (அக் 21) அனுமந்திருத்தம் சென்றது.வாகனம் வெப்பாலம்பட்டி அருகே செல்லும் பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிறு காயலுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்தில் காயமடைந்த ஓட்டுனரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.