News October 21, 2025
அதிமுகவுடன் கூட்டணி.. விஜய் போட்ட கண்டிஷன் இதுதான்

NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க அதிமுக மட்டுமின்றி, டெல்லி மேலிடமும் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியிலிருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் தவெகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் CM நாற்காலி தங்களுக்கே வேண்டும் என கூறியதாக தெரிகிறது. பின்னர், துணை முதல்வர், மத்திய வாரிய பதவிகள் உள்ளிட்டவைகளை வழங்க முன்வந்ததாம். ஆனாலும், அதை விஜய் தரப்பு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.
Similar News
News March 19, 2026
காஞ்சிபுரம்: ரூ.50 போதும்..ரூ.1.7 லட்சம் பெறலாம்!

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். *யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க*
News March 19, 2026
அண்ணன் சீர் சொந்த பணத்தில் கொடுங்கள்: சீமான்

நாதக தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது விஜய்யை சீமான் விமர்சித்து பேசியுள்ளார். என் தம்பி அறிவித்த இலவசங்களுக்கே மாதம் ₹1 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இப்பணத்தை எங்கிருந்து கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அண்ணன் சீர், மாமன் சீர் என அனைத்தையும் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 1 பவுன் தங்கம், பட்டு சேலை அடங்கிய அண்ணன் சீர் திட்டத்தை விஜய் வாக்குறுதியாக அளித்துள்ளார்.
News March 19, 2026
இனி பிரச்னை இல்லை.. வந்தாச்சு GAS ATM!

ஹரியானாவின் குருகிராமில் BPCL நிறுவனம், GAS ATM-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கேஸ் கனெக்ஷனில் உள்ள போன் நம்பர் கொடுத்து, பணம் செலுத்தி, காலி சிலிண்டரை கொடுத்தால் புது சிலிண்டர் கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் 30 கிலோ சிலிண்டர்கள் இங்கு கிடைப்பதில்லை. மாறாக, 15 கிலோ மட்டுமே எடை கொண்ட Fiber சிலிண்டர்கள் தான் கிடைக்குமாம். அதனால் தூக்கிட்டு போவதும் ஈசி. நம்மூரிலும் வந்தா நல்லா இருக்கும்ல?


