News October 21, 2025
ராணிப்பேட்டை: 10th பாஸ் போதும்…இஸ்ரோவில் வேலை!

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th பாஸ் முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 18-35 வயதுடையவர்கள் <
Similar News
News January 31, 2026
ராணிப்பேட்டை: குளத்தில் மிதந்த ஆண் சடலம்!

புதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார் குப்பத்தில் உள்ள குளத்தில் 60 வயது ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என விசாரித்து வருகின்றனர்.
News January 31, 2026
ராணிப்பேட்டையில் ஹவுஸ் ஓனர் தொல்லையா? CALL

ராணிப்பேட்டையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News January 31, 2026
ராணிப்பேட்டையில் டாஸ்மாக் இயங்காது!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று(30.01.2026) காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறையினர் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். மேலும், வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு நாளை(பிப்.1) ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.


