News October 21, 2025
கோவை: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.SHARE பண்ணுங்க
Similar News
News October 21, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (21.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
ரூ.150 கோடிக்கு கோவையில் மது விற்பனை

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு கோவை மண்டலத்தில் மட்டும் ரூ.150 கோடியே 31 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
News October 21, 2025
கோவையில் பட்டாசு வெடிப்பு – 36 பேர் மீது வழக்குப்பதிவு!

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தை தாண்டி பட்டாசுகளை வெடித்தாக கோவையில் 36 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.