News October 21, 2025
முதல்முறை முதலீட்டாளர்களே.. நல்ல நேரம் இதுதான்

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு வேகமாக வளரும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். விடுமுறை தினமான இன்று மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில் மட்டும் இயங்கும் பங்குச்சந்தையில், உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். நாளையும் (அக்.22) பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை இயங்கும்.
Similar News
News October 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 496
▶குறள்:
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
▶பொருள்:ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.
News October 22, 2025
ஸ்ரீலீலா தான் நேஷனல் கிரஷ்: ரன்வீர் சிங்

ஸ்ரீலீலா தான் உண்மையான நேஷனல் கிரஷ் என நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். அவரது ஒழுக்கம் மற்றும் திறமை ஆசாத்தியமானது எனவும், ஸ்ரீலீலாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடஇந்தியாவிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அவர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து அட்லீயின் விளம்பர படத்தில் நடித்திருந்தனர்.
News October 22, 2025
புயல் என்றால் என்ன தெரியுமா?

வளிமண்டலத்தில் காற்றழுத்தம் குறையும்போது ‘காற்றழுத்த தாழ்வு நிலை’ உருவாகிறது. தரையில் இருக்கும் வெப்பக்காற்று உயரும்போது, இப்படியான நிலை ஏற்படும். பொதுவாக இது கடற்பரப்பில் நடைபெறும். இந்த நிலை படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாறும். இறுதியாக, சுறாவளிக் காற்றின் வேகம் 30 knotகளை கடக்கும்போது அது புயல் என அறிவிக்கப்படுகிறது. SHARE IT!