News October 21, 2025
புதுகை: பைக் மோதி முதியவர் பரிதாப பலி!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணி (70). இவர் அக்.19 தனது பைக்கில் பொன்னமராவதிக்கு சென்றுள்ளார். அப்போது கேசராபட்டி அருகே, பெட்ரோல் போடுவதற்காக பைக்கை திருப்பிய நிலையில், உலகம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஒட்டிவந்த பைக், எதிர்பாராதவிதமாக, மணி ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
Similar News
News January 27, 2026
வரலாற்று சிறப்புமிக்க கொடும்பாளூர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். இது சங்க காலத்தில் இருந்தே புகழ் பெற்ற ஊராக கருதப்படுகிறது. குறிப்பாக, சிலப்பதிகாரம் நூலில் கொடும்பாளூர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சோழர் கால கோயில்களும், கற்கோவில்களும் உள்ளன. மேலும் இது பொன்னியின் செல்வன் நாவலில் வரும் வானதி இளவரசியின் பிறப்பிடம் என்றும் சொல்லப்படுகிறது. நம்ப ஊர் பெருமைய நம்பதானே ஷேர் பண்ணும்!
News January 27, 2026
புதுக்கோட்டை: பிடிபட்ட குற்றவாளி – போலீசார் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கோ போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார். அதனைத் ஹொடர்ந்து, புதுகை மத்திய சிறையில் அடைப்பதற்கு அவரை கூட்டி செல்லும் வழியில் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில், தனிப்படை போலீசார் குற்றவாளியை ஒரிசாவில் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.
News January 27, 2026
புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டம் திருப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நாளை(ஜன.28) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நாளை(ஜன.28) உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது எனவும் அதற்கு பதிலாக வருகிற பிப்.07ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இதனால் நாளை பள்ளி கல்லூரி அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.


