News October 21, 2025
7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று(அக்.21) மிக கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கூறியுள்ளது.
Similar News
News March 13, 2026
ஈரான் போர்: 4-வது விமானத்தை இழந்த அமெரிக்கா

ஈராக்கில் அமெரிக்காவின் KC-135 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 6 பணியாளர்களை தேடும் பணி தொடர்வதாகவும், இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலால் அல்ல எனவும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. 2 விமானங்கள் மோதியதில் ஒன்று விபத்துக்குள்ளாக, மற்றொன்று பாதுகாப்பாக தரையிறங்கியதாக கூறப்படுகிறது. இதற்குமுன் குவைத்தில் 3 போர் விமானங்களை அமெரிக்கா இழந்தது.
News March 13, 2026
இதுவா இந்தியாவின் ராஜதந்திரம்? ப.சிதம்பரம்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தாலும், போரில் மரணித்தவர்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். USA உள்பட 12 நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ரஷ்யா & சீனா இதற்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை என்றும் அவர் கேட்டுள்ளார்.
News March 13, 2026
பெட்ரோல், கேஸ் சிலிண்டர்.. அடுத்த அதிர்ச்சி

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராகவே உள்ளதாகவும், சில கட்டுப்பாடுகள் என்பது தற்காலிகமானதே என அரசு கூறியிருந்தது. ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனை இருமடங்கு உயர்ந்ததால், நேற்று இரவு சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சில பெட்ரோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், ஹோட்டல்களில் உணவு வகைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


