News October 21, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்வு!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 116(₹10,203) டாலர்கள் உயர்ந்துள்ளது. இதனால் இன்று 4,461 டாலர்களுக்கு விற்பனையாகிறது. கடந்த 18-ம் தேதி 45 டாலர்கள் குறைந்த நிலையில், நேற்று 44 டாலர்கள், இன்று 116 டாலர்கள் என மீண்டும் ஏறுமுகத்தைக் கண்டுள்ளது. இது மேலும் தொடர்ந்தால், இந்தியாவில் மீண்டும் தங்கம் விலை உயர்வைச் சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
Similar News
News February 16, 2026
தவெக + காங். + விசிக கூட்டணியா? திருமா பதில்

திமுகவிலிருந்து காங்., & விசிக பிரிந்து தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், காங்., நிலைப்பாடு பற்றி தான் கருத்து சொல்ல ஏதுமில்லை என்றார். அதேநேரம், விசிகவுக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. இந்த கூட்டணியின் நலன்கள் பாதிக்கப்படும் வகையில் எந்த முடிவையும் விசிக எடுக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
News February 16, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News February 16, 2026
வஞ்சிக்கப்பட்ட விவசாயிகள்… மோடிக்கு ராகுல் கேள்வி

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் இருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மரபணு மாற்றப்பட்ட சோயாபீன் எண்ணெயை US-ல் இருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தால், நமது விவசாயிகளின் நிலை என்ன?, இந்த ஒப்பந்தம் செயல்பட ஆரம்பித்தவுடன், ஒவ்வொரு ஆண்டும் அது விரிவடைவதைத் எவ்வாறு தடுப்போம்? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை PM மோடியிடம் அவர் எழுப்பியுள்ளார் .


