News October 21, 2025
கேதார கௌரி விரதம் இருப்பது எப்படி?

நல்ல கணவன் கிடைக்கவும், கணவரின் நலம் வேண்டியும் பெண்கள் கேதார கெளரி விரதம் மேற்கொள்வார்கள். 21 நாள்கள் மேற்கொள்ளப்படும் விரதம் தற்போது, ஒருநாள் விரதமாகிவிட்டது. காலையில் குளித்து, கலசத்தில் நூலால் 21 முடிச்சுகளை அமைத்து, சிவன் பார்வதியை வழிபடணும். 21 எண்ணிக்கையில் பாக்கு, வெற்றிலை, பூஜை பொருள்கள் படைத்து வழிபடலாம். விரதம் முடிந்து கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டலாம்.
Similar News
News January 14, 2026
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

₹1,000 மகளிர் உரிமைத் தொகை தற்போது தகுதியான மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமைத் தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்பதை அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, அரசு & தனியார் நிறுவனங்களில் ஊதியம் பெறுபவராக இருக்கக்கூடாது. எந்தவொரு உதவித்தொகையும் பெறக்கூடாது. பள்ளி, கல்லூரி மாணவிகளாக இருக்கக்கூடாது. உரிமைத்தொகை பெறுவோர் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.
News January 14, 2026
மதுப் பிரியர்களுக்கு அடுத்தடுத்து ஷாக்

திருவள்ளுவர் தினமான ஜன.16-ல் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக்குகளையும் மூட தமிழக அரசும் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், ஜன.16, 26 (குடியரசு தினம்), பிப்.1 (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் ஷாக்கில் உள்ளனர்.
News January 14, 2026
10-வது போதும்.. ₹19,900 சம்பளம்!

NCERT-ல் Lower Division Clerk, Computer Operator Grade-III உள்பட 176 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன ✱வயது: 18- 50 வரை ✱கல்வித்தகுதி: 10-வது முதல் டிகிரி வரை வேலைக்கு ஏற்ப மாறுபடுகிறது ✱தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & நேர்காணல் ✱சம்பளம்: ₹19,900 – ₹78,800 ✱விண்ணப்பிக்க <


