News October 21, 2025

ராமநாதபுரம்: படகில் பயங்கரவாதி ஊடுருவலா?

image

மண்டபம் கடற்கரையில் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த பைபர் கிளாஸ் படகு ஒதுங்கியது. இப்படகை கைப்பற்றி மண்டபம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர். இப்படகில் மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவர் ஊடுருவி இருப்பதாகவும் அவர் இலங்கையில் குற்ற பின்னணி உள்ளவரா அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவரா என்ற விவரம் தெரியாமலும் போலீசார் தவிக்கின்றனர். சம்பவம் நடந்து 7 நாளாகியும் இதுவரை மர்ம ஆசாமியை பிடிக்க முடியவில்லை.

Similar News

News October 22, 2025

மழை பாதித்த பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

image

மண்டபம் பேரூரில் நேற்றிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர் நகர், கலைஞர் நகர் பகுதிகள் மழை நீரில் சூழ்ந்தன. இங்கு தேங்கிய தண்ணீர் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இப்பகுதிகளை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார். மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். பேரூர் தலைவர் ராஜா உடன் சென்றார்.

News October 21, 2025

ராம்நாடு: மழை பாதிப்பு புகார் எண் வெளியீடு.!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் மவாட்டத்திற்கென பிரத்தியகமாக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

BREAKING: ராமநாதபுரத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது. என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம்,விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!