News October 21, 2025

நடைப்பயிற்சியின் போது, இந்த அறிகுறிகள் இருக்கா?

image

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இந்த அறிகுறிகள் தெரிகிறதா? சீக்கிரமாக சோர்ந்து போனால் அது உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருப்பதையும், சரியான தூக்கமில்லாமல் இருப்பதையும் குறிக்கிறது ►கால்கள் மரத்துப் போனால், நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு முக்கியமான பி12 குறைபாடு இருப்பதை குறிக்கிறது ►மூச்சு வாங்குதல், மார்பு பிடிப்பதாக இருப்பது போல் தோன்றுதல் இதயம் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்துகின்றன. SHARE IT.

Similar News

News October 21, 2025

BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

image

பருவமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கும் நிலையில், பள்ளி வளாகத்தில் இருக்கும் கட்டடங்கள், வகுப்பறைகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளாகத்திலுள்ள செடி, கொடிகளை அகற்றவும், திறந்த வெளி கிணறு, கழிவுநீர் தொட்டி, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2025

நவ.1 கடைசிநாள்.. சீனா மீது 155% வரி: டிரம்ப் வார்னிங்

image

வரும் நவ.1-ம் தேதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாவிட்டால், சீனா மீது 155% வரிவிதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எனவும், இம்மாத இறுதியில் சீன அதிபரை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News October 21, 2025

ரயில்வேயில் வேலை: 5,810 பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிகல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்றுமுதல், வரும் நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள்ளும், தேர்ந்தெடுக்கும் பணியிடங்களுக்கு ஏற்ப பட்டம் பெற்றிருக்கவும் வேண்டும். <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!