News October 21, 2025
BREAKING: அதிமுகவில் இணைந்தார்

NTK மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக், அக்கட்சியில் இருந்து விலகி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலையில் தன்னை ADMK-வில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரும் தங்களை ADMK-வில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நெருங்குவதால், மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் சேர்க்க நிர்வாகிகளுக்கு, EPS புதிய அசைன்மெண்ட் கொடுத்துள்ளார்.
Similar News
News February 24, 2026
கணவனை காதலிக்கு விற்பனை செய்த மனைவி

MP-ன் போபாலில் கணவனை, மனைவி ஒருவர் ₹1.5 கோடிக்கு அவரது காதலிக்கு விற்பனை செய்த விநோத சம்பவம் நடந்துள்ளது. அரசு அதிகாரியான 52 வயது பெண், சக ஊழியரான 42 வயது நபரை காதலித்துள்ளார். இவ்விவகாரம் கோர்ட் வரை செல்லவே, விசாரணைக்கு பிறகு குடும்ப நலன் கருதி பணத்தை பெற்றுக் கொண்டு 23 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த கணவனை விட்டு கொடுத்துள்ளார். சினிமாவை விஞ்சிய இச்சம்பவம் SM-ல் பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து?
News February 24, 2026
தொகுதிப் பங்கீடு: திமுக – காங் இடையே இழுபறி

திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 41 தொகுதிகள் வேண்டும் என காங்., விடாப்பிடியாக இருக்கும் நிலையில், திமுகவோ அதிகபட்சமாக 27 மட்டுமே தர முடியும் என கூறிவிட்டதாம். இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், மறுபுறம் சிபிஐ, விசிக, மதிமுகவும் கூடுதல் சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
News February 24, 2026
ம.பி., மசூதி வளாகத்தில் இந்து கோயில் எச்சங்கள்: ASI

ம.பி.,யின் தார் மாவட்டம் போஜ்ஷாலாவில் உள்ள மசூதி, பழங்கால இந்து கோயில்களின் எச்சங்களை பயன்படுத்தி கட்டப்பட்டது என்று இந்திய தொல்லியல் துறை (ASI) ஆய்வு முடிவு கூறுகிறது. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படும் இம்மசூதியில் HC வழிகாட்டுதலின்படி ஆய்வு செய்யப்பட்டது. அகழாய்வுகள், சிலை வடிவமைப்புகள், அறிவியல் ஆய்வுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததன் மூலம் இம்முடிவுக்கு வந்துள்ளதாக ASI கூறியுள்ளது.


