News October 21, 2025
காதல் தோல்வியில் வலி யாருக்கு அதிகம்? ரஷ்மிகா

லவ் பிரேக்கப்பின் போது பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாக ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். காதல் தோல்வியால் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார் என்பதை ஏற்க மறுத்த அவர், பெண்கள் மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். ஆண்கள் போல் தாடி வளர்க்க முடியாததால், பெண்கள் படும் அவஸ்தை மற்றவர்களுக்கு தெரிவதில்லை எனவும் பேசியுள்ளார். அவரது ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ படம் நவம்பர் 7-ல் வெளியாகிறது.
Similar News
News March 16, 2026
ஈரோடு: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்.
News March 16, 2026
நீடிக்கும் இழுபறி.. அதிமுக கூட்டணியில் நடப்பது என்ன?

தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், NDA-வில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இவ்விவகாரத்தில் திமுக கூட்டணி ஓரடி முன்னர் செல்வதாக கூறும் அரசியல் நோக்கர்கள், விஜய் வருகைக்காகவே இந்த இழுபறி நீடிக்கலாம் எனவும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால், தவெகவுடன் கூட்டணி பேசவில்லை என கூறும் EPS, ஏன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய இழுத்தடித்து வருகிறார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
News March 16, 2026
திமுகவினரை கண்டாலே கோபம் எழுகிறது: நயினார்

காட்டுமன்னார்கோவில் அரசு ஹாஸ்பிடலின் பிரசவ வார்டுக்குள் புகுந்து, கஞ்சா போதை ஆசாமிகள் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திமுகவின் அவல ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப்பொருள்கள் கிடைப்பதாகவும், இதையெல்லாம் மறைத்துவிட்டு ’போதை நடமாட்டமே இல்லை’ என வாய்கூசாமல் விளம்பரப்படுத்தி வரும் திமுகவினரை கண்டாலே கடும் கோபம் எழுகிறது எனவும் சாடியுள்ளார்.


