News October 21, 2025
கற்றாழையை உணவில் சேர்த்தல் இத்தனை நன்மைகள்

ஒரு குளிர்ந்த கற்றாழை ஜூஸ் உங்கள் செரிமானத்தை தூண்டி, தோலில் ஒளிரும் அழகை தரும். மேலும் உணவின் ஒரு பாகமாக இதை சேர்க்கும் போது பல நன்மைகள் கிடைக்கும்.*கற்றாழை ஜெல்லை உணவில் சேர்த்தால், குடல் சுத்தமாகி செரிமானம் சீராகும். குடல் இயக்கத்தையும் இது தூண்டும். *கற்றாழை உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. *கற்றாழை இயற்கையான டிடாக்ஸாக செயல்பட்டு, கல்லீரலை சுத்தமாக வைத்திருக்கிறது.
Similar News
News October 21, 2025
தினமும் 2.5 GB டேட்டா.. அசத்தல் ரீசார்ஜ் ஆஃபர்

BSNL தனது 25-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு சில்வர் ஜூப்ளி பிளானை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ₹225-க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு தினமும் 2.5GB டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும், அன்லிமிட்டெட் கால், தினமும் 100 SMS உள்ளிட்ட சலுகைகளும் அடங்கும். ஜியோ, ஏர்டெல், VI உள்ளிட்ட நிறுவனங்களில் தினமும் 2.5GB டேட்டா பெற ₹300-க்கு மேல் ரீசார்ஜ் செய்ய வேண்டும். SHARE IT.
News October 21, 2025
Sports Roundup: இந்திய அணிக்கு ₹22 லட்சம் பரிசு

* 17 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை கால்பந்துக்கு முதல் முறையாக தகுதி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு ₹22 லட்சம் பரிசு அறிவிப்பு. *பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கேஷவ் மகாராஜ் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். *US கர்லிங் சாம்பியன்ஷிப்பில் நைஜீரியா, சவுதி அரேபியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி. *ஆசிய யூத் கேம்ஸ், குராஷ் தற்காப்பு கலையில் இந்தியா 3 பதக்கம் வென்றுள்ளது.
News October 21, 2025
ஹெல்மெட் பற்றி இந்த விஷயம் தெரியுமா?

➤சிவப்பு ஹெல்மெட்: தீயணைப்பு வீரர்கள் போன்ற அவசரகால சேவைகளில் ஈடுபடுபவர்கள் அணிகிறார்கள் ➤மஞ்சள்: கட்டுமான தொழிலாளர்களால் பயன்படுத்தப்படுகிறது ➤நீல ஹெல்மெட்: எலக்ட்ரீஷியன், பிளம்பிங் போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் அணிகிறார்கள் ➤வெள்ளை: பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் போன்ற தலைமை பதவிகளில் உள்ளவர்கள் ➤பச்சை: பாதுகாப்பு ஆய்வாளர்கள், தள மேற்பார்வையாளர்கள் அணிகிறார்கள். அனைவரும் தெரிஞ்சிக்க SHARE.