News October 21, 2025
வரலாற்றில் இன்று

*1895 – ஜப்பானிய படைகளின் முற்றுகையால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
*1937 – நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்ததினம்.
*1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.
*1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
*1987 -யாழ்ப்பாண ஹாஸ்பிடல் படுகொலையில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
Similar News
News October 21, 2025
தீபாவளி டாஸ்மாக் வசூல் இவ்வளவா! இதுதான் டாப்

தீபாவளிக்கு மண்டல வாரியாக மது விற்பனை வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ₹170.64 கோடியுடன் மதுரை மண்டலம் முதலிடத்தில் உள்ளது. சென்னை(₹158.34), திருச்சி(₹157.31), சேலம்(₹153.34), கோவை(₹150.31) ஆகிய மண்டலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஒட்டுமொத்தமாக, அக்.18. 19, 20 ஆகிய 3 நாள்களில் மட்டும் ₹789 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 21, 2025
1 கிலோ வெங்காயம் வெறும் 88 பைசா தான்

‘அரசு இதற்கு தீர்வு காணவில்லையென்றால், விவசாயிகளின் தற்கொலை அதிகரிக்கும்’ என்று ஆதங்கத்துடன் கூறுகிறார், புனேவைச் சேர்ந்த விவசாயி சுடாம் இங்கிள். ₹66,000 செலவில் பயிரிடப்பட்ட 750 கிலோ வெங்காயம் வெறும் ₹664-க்கு மட்டுமே விற்பனையானதே அவரது ஆதங்கத்திற்கு காரணம். அங்கு நிலவும் வெங்காய விலை வீழ்ச்சியால் இந்த பெருநஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, 1 கிலோ வெங்காயம் 88 பைசாக்களுக்கே கொள்முதல் ஆகியுள்ளது.
News October 21, 2025
கனமழை.. திமுக நிர்வாகிகளை களமிறக்கும் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பருவமழை தொடர்பாக சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி திமுக நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் DCM உதயநிதி, அமைச்சர் KN.நேரு, மேயர்கள், துணை மேயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.