News October 21, 2025
WORLD ROUNDUP: மெக்சிகோ வெள்ளத்தில் 76 பேர் பலி

*பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற பதிவான லேசான நில அதிர்வு
*ஏமன் கடற்கரையில் எல்பிஜி டேங்கர் வெடித்த நிலையில் 23 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
*ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்வரை போர் ஓயாது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
*மெக்சிகோவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 76-ஆக உயர்வு
*டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் போராட்டம்
Similar News
News October 21, 2025
தீபாவளி: டாஸ்மாக் வசூல் இவ்வளவு கோடியா!

தீபாவளி விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், மது விற்பனை குறித்த விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ₹789 கோடி வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அக்.18, 19, 20 ஆகிய 3 நாள்களில் மட்டும் வசூலாகி இருப்பதாக டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் விடுமுறை என்பதால் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News October 21, 2025
போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: EPS

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு <<18061217>>மழை<<>> எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களும் IMD அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 21, 2025
தியேட்டரில் மீண்டும் கான்ட்ராக்டர் நேசமணி!

2001-ல் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படம் அதிரிபுதிரி வெற்றியடைந்தது. விஜய்- சூர்யாவின் அசத்தலான நடிப்பு, துள்ளலான பாடல்கள், நண்பர்களை சுற்றி நிகழும் சூப்பரான திரைக்கதை ஆகியவற்றுடன், வடிவேலு காமெடி கலாட்டாவை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி தீர்த்தனர். இந்த படம் வரும் நவம்பர் 21-ம் தேதி ரீரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கான்ட்ராக்டர் நேசமணி காமெடியை தியேட்டரில் ரசிக்க ரெடியா?