News October 21, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 495
▶குறள்:
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
▶பொருள்:தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.

Similar News

News October 21, 2025

கனமழை.. திமுக நிர்வாகிகளை களமிறக்கும் ஸ்டாலின்

image

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பருவமழை தொடர்பாக சென்னையில் உள்ள அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதற்காக, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி திமுக நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் DCM உதயநிதி, அமைச்சர் KN.நேரு, மேயர்கள், துணை மேயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

News October 21, 2025

பெண் குழந்தையின் School Fees-க்கு நிதியுதவி; APPLY NOW

image

CBSE 10-ம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் Single Child-ஆக இருக்கும் மாணவிகளுக்கு 11, 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதத்திற்கு ₹1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்துக்கு மேல் இருக்ககூடாது. விருப்பமுள்ளவர்கள் அக்.23-க்குள் cbse.gov.in -ல் அப்ளை பண்ணுங்க. பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 21, 2025

உணவை வேக வேகமாக சாப்பிடுறீங்களா?

image

வேகமாக சாப்பிடுவதால், இந்த 3 பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது ✱மெதுவாக சாப்பிட்டால், மூளைக்கு வயிறு நிரம்பும் சமிக்ஞை கிடைக்கும். வேகமாக சாப்பிடும் போது, இந்த சிக்னல் கிடைக்காததால், அதிகமாக சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்கும் ✱உணவை நன்கு மெல்லாமல் விழுங்குவதால், செரிமான பிரச்னை ஏற்படலாம் ✱ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரித்து குறைவதால், நீரிழிவு நோய் வரலாம். கவனமா இருங்க.

error: Content is protected !!