News October 21, 2025
NATIONAL ROUNDUP: இன்று கேரளா செல்லும் ஜனாதிபதி

*சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்
*தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் உடனடியாக தரையிறக்கம்
*பிஹாரில் முதற்கட்ட தேர்தலில் 61 வேட்பாளர்கள் வாபஸ்
*தீபாவளியையொட்டி டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமடைந்ததால் மக்கள் அவதி
*இன்று கேரளா செல்கிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
Similar News
News October 21, 2025
பள்ளிகளுக்கு விடுமுறையா? கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு

மழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்ட <<18063262>>கலெக்டர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை<<>> நடத்தினார். அப்போது, அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அறிவுறுத்தினார். மேலும், மழையின் தீவிரத்தைக் கண்காணித்து நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆகவே, இரவுக்குள் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
News October 21, 2025
ஜப்பானிய மொழியில் வாழ்த்து சொன்ன PM மோடி

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்ட <<18061973>>சானே தகாய்ச்சிக்கு<<>> PM மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜப்பானுடன் சேர்ந்து செயலாற்ற தயாராக இருப்பதாகவும், இருநாடுகளுக்கு இடையேயான நட்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பாக இருக்க இந்தியா-ஜப்பானின் உறவு வலுவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
இந்திய அணிக்கு கேப்டனான ரிஷப் பண்ட்!

தெ.ஆ., அணிக்கு எதிரான இந்திய A அணி ➤முதல் போட்டி: பண்ட்(C), ஆயுஷ் மாத்ரே, N ஜெகதீசன், சாய் சுதர்ஷன்(VC), படிக்கல், படிதர், ஹர்ஷ் துபே, தனுஷ் கொட்டியன், மானவ் சுதார், கம்போஜ், யஷ் தாக்கூர், பதோனி, சரண்ஷ் ஜெயின் ➤2-வது போட்டி: பண்ட்(C), சாய் சுதர்ஷன்(VC), ஜுரேல், KL ராகுல், படிக்கல், ருதுராஜ், ஹர்ஷ் துபே, தனுஷ் கொட்டியன், மானவ் சுதர், கலீல் , ப்ரார், அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித், சிராஜ், தீப்.