News October 21, 2025
பிஹார் தேர்தலில் இருந்து பின்வாங்கிய ஹேமந்த் சோரன்

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், RJD-யுடன் இணைந்து ஜார்கண்ட் CM ஹேமந்த் சோரனின் முக்தி மோச்சா கட்சி இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு சரியாக அமையாததால், தனித்து 6 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக ஹேமந்த் சோரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிஹார் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி சார்ப்பில் திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News October 21, 2025
ஜப்பானிய மொழியில் வாழ்த்து சொன்ன PM மோடி

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்ட <<18061973>>சானே தகாய்ச்சிக்கு<<>> PM மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜப்பானுடன் சேர்ந்து செயலாற்ற தயாராக இருப்பதாகவும், இருநாடுகளுக்கு இடையேயான நட்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பாக இருக்க இந்தியா-ஜப்பானின் உறவு வலுவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
இந்திய அணிக்கு கேப்டனான ரிஷப் பண்ட்!

தெ.ஆ., அணிக்கு எதிரான இந்திய A அணி ➤முதல் போட்டி: பண்ட்(C), ஆயுஷ் மாத்ரே, N ஜெகதீசன், சாய் சுதர்ஷன்(VC), படிக்கல், படிதர், ஹர்ஷ் துபே, தனுஷ் கொட்டியன், மானவ் சுதார், கம்போஜ், யஷ் தாக்கூர், பதோனி, சரண்ஷ் ஜெயின் ➤2-வது போட்டி: பண்ட்(C), சாய் சுதர்ஷன்(VC), ஜுரேல், KL ராகுல், படிக்கல், ருதுராஜ், ஹர்ஷ் துபே, தனுஷ் கொட்டியன், மானவ் சுதர், கலீல் , ப்ரார், அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித், சிராஜ், தீப்.
News October 21, 2025
எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று என்ன அலர்ட்?

*அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
*மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி.
*கனமழைக்கான மஞ்சள் அலர்ட்: ராணிப்பேட்டை, தி.மலை, திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி மக்கள் எச்சரிக்கையாக இருங்கள்.