News October 21, 2025

ஹரிஷ் கல்யாணம் படத்துக்கு ஜிவி பாராட்டு

image

‘பைசன்’, ‘டியூட்’ படங்களுடன் தீபாவளி ரேஸில் ஹரிஷ் கல்யாணின் டீசலும் களம் கண்டது. ‘பைசன்’,‘டியூட்’ படங்கள் வசூலை அள்ளி வரும் நிலையில் டீசல் சற்று பின்தங்கியுள்ளது. இந்நிலையில் ‘டீசல்’ படத்தை பார்த்து ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என அவர் பதிவிட்டுள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்ற பெயரை ஹரிஷ் தக்க வைத்துள்ளார்.

Similar News

News April 4, 2026

ரிஷிவந்தியம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே உள்ள நூரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் மலேஷ். சமையல் தொழிலாளியான இவருக்கு கமலி(31) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். ஓட்டல் வேலைக்கு செல்லும் மலேஷ், சம்பள பணத்தை சரியாக மனைவியிடம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த கமலி விஷம் குடித்து மயங்கினார். சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.

News April 4, 2026

ELECTION: டஃப் தொகுதி.. விட்டுக்கொடுத்த AC சண்முகம்!

image

புதிய நீதிக் கட்சிக்கு <<19557080>>பாஜக சீட் ஒதுக்காத<<>> காரணம் குறித்து AC சண்முகம் விளக்கமளித்துள்ளார்.
கடினமான சட்டப்பேரவை தொகுதியை பாஜக கொடுத்ததால் அதை வேண்டாம் என திருப்பி கொடுத்துவிட்டதாக தெரிவித்தார். எனினும், அத்தொகுதியில் தான் பரிந்துரைத்த வேட்பாளரையே பாஜக களமிறக்கியிருப்பதாகவும் அவர் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

News April 4, 2026

10-15 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு: கிருஷ்ணசாமி

image

கூட்டணியில் இணைந்திருந்தால் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் தனித்து போட்டியிடுவதால் 10-15 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்பு உள்ளதாக கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும், ஏப்.6 அன்று மதியம் 12-3 மணிக்குள் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!