News October 21, 2025

திண்டுக்கல் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை நேற்று (அக்-20) இரவு 11 மணி முதல் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 21, 2025

நத்தம்: குடும்பப் பிரச்னையால் இளைஞர் தற்கொலை!

image

நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி சின்னமலையூரை சேர்ந்தவர் நாகராஜ்(22). இவரது மனைவி ஜெயலெட்சுமி(21). இவர்கள் குடும்பத்திற்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த நாகராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 21, 2025

திண்டுக்கல்: ஒரே நாளில் 150 டன் குப்பைகள் அகற்றம்!

image

தீபாவளி பண்டிகையை ஒட்டி திண்டுக்கல் மாநகராட்சியில் சுமார் ஆயிரக் கணக்கில் புதிய ஜவுளிக்கடைகள் மற்றும் பட்டாசுக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் மக்கள் அனைவரும் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பட்டாசு வெடி பொருட்களை வாங்கி வெடிக்கத் தொடங்கினர். இதனால், மாநகராட்சியில் சுமார் 350 தூய்மை பணியாளர்கள் சாலைகளில் தேங்கி கிடந்த குப்பைகளை சுத்தம் செய்ததில் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

News October 21, 2025

திண்டுக்கல்: பட்டாசு வெடித்ததால் 16 வழக்குகள்!

image

திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு காலை 6 முதல் 7 மணி, மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியில்லா நேரங்களில் பட்டாசு வெடித்ததாக மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் நகரில் 7 வழக்குகள், பழனியில் 3 வழக்குகள் உள்ளிட்டவை அடங்கும்.

error: Content is protected !!