News October 21, 2025

தருமபுரி: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

Similar News

News October 21, 2025

தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 21, 2025

தருமபுரி: நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி

image

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக குறிப்பாக நெசவாளர்காலனி, இலக்கியம்பட்டி, செந்தில்நகர், நெடுமாறன் நகர், காந்திநகர் போன்ற இடங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News October 21, 2025

தருமபுரி: 10th பாஸ் போதும்…இஸ்ரோவில் வேலை!

image

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10th பாஸ் முதல் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.56,100 – ரூ.1,77,500 வரை வழங்கப்படும். 18-35 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ்.14ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இஸ்ரோவில் வேலை செய்ய இதைவிட அருமையான வாய்ப்பு கிடையாது. உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!