News April 17, 2024
விவேக் நினைவு நாளில் மரக்கன்று நட்ட படக்குழு

நடிகர் விவேக்கின் நினைவு நாளை முன்னிட்டு, ‘வைபவ் 27’ படக்குழுவினர் மரக்கன்று நட்டுள்ளனர். நடிகர் என்பதை கடந்து, அப்துல் கலாமின் கோரிக்கையை ஏற்று மரக்கன்று நட்டு பூமியை பசுமையாக மாற்றும் பணியில் விவேக் ஈடுபட்டு வந்தார். அதனால் தான் அவர் ‘சின்ன கலைவாணர்’ என அழைக்கப்பட்டார். அவர் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Similar News
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் விலையில் மாற்றமில்லை!

அட்சய திருதியையொட்டி தங்கம் விலை இன்று உயர்வை சந்திக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தங்கம் விலையில் மாற்றமில்லை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,980-க்கும், சவரன் ₹71,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியை பொறுத்தவரையில் 1 கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 விலை உயர்ந்தது கவனிக்கத்தக்கது.
News April 30, 2025
தேமுதிக பொதுக்குழு இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல், கூட்டணி விவகாரம் குறித்தும் அறிவிப்பு வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
News April 30, 2025
பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் கூடாது.. அதிரடி உத்தரவு!

மதுரையில் தனியார் நர்சரி பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கலெக்டர் சங்கீதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோடை விடுமுறை நாள்களில் பள்ளிகளில் அனுமதியின்றி பயிற்சி வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல், TN முழுவதும் வகுப்புகள் நடக்கிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.