News October 21, 2025
மச்சினனுக்கு அண்ணி கொடுத்த தண்டனை

உ.பி.,யில் 20 வயது இளைஞரின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்ன தெரியுமா? அண்ணியின் தங்கையை காதலித்த இளைஞர் உமேஷ், பின்னர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், தன் தங்கை கவலையில் வாடுவதை பொறுக்க முடியாத அண்ணி மஞ்சு, தூங்கிக் கொண்டிருந்த உமேஷை சரமாரியாக குத்தியதுடன், அவரின் அந்தரங்க உறுப்பையும் துண்டித்தார். இளைஞர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.
Similar News
News March 21, 2026
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பதற்றம்

ரம்ஜான் தினமான இன்று தி.குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு செல்ல இஸ்லாமியர்கள் முயன்றுள்ளனர். வழக்கு நடைபெறும் நிலையில் அங்கு செல்லக்கூடாது என தடுத்த போலீஸார், அடையாள அட்டைகளை காண்பித்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆண்டுதோறும் அமைதியான முறையில் தொழுகை நடத்திவரும் தங்களுக்கு பண்டிகை காலங்களில் கூட இவ்வளவு கட்டுப்பாடா என்று இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இன்னும் தீவிரமான சிக்கல்கள் வரும்: விஜய்

நேற்று 2-ம் கட்ட வேட்பாளர் நேர்காணலை விஜய் நடத்தினார். அப்போது, நாம் வாக்கை பிரிக்க வரவில்லை, ஆட்சியை பிடிக்க வந்திருக்கிறோம் என்று வேட்பாளர்களிடம் உற்சாகத்துடன் விஜய் கூறியுள்ளார். கடைசி நேரத்தில் இன்னும் தீவிரமான சிக்கல்களும் நமக்கு வரலாம், எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்வோம் என்று அவர் பேசியதாகவும் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். Let’s make History என்றும் விஜய் கூறியுள்ளார்.