News April 17, 2024
சிறப்பு கட்டண சேவை ரத்து

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வரும் 23 ஆம் தேதி அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 24 ஆம் தேதி அதிகாலை 5.47 மணி வரை சித்திரா பௌர்ணமி கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே அன்று
கட்டணமில்லாமல் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.50 சிறப்பு கட்டண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 30, 2025
சாலையை கடக்க முயன்ற பாட்டி, பேரன் கார் மோதி பலி

செங்கத்தை அடுத்த தானகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த சித்ரா (60). இவர், அம்மாபாளையம் கிராமத்தில் நேற்று ஊரக திட்ட வேலைக்காக சென்றார். அப்போது, அவரது பேரன் யஷ்வந்தையும்(2) உடன் அழைத்துச் சென்றார். தானகவுண்டன் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே யஷ்வந்துடன் சித்ரா சாலையைக் கடக்க முயன்றபோது, அவர்கள் மீது தி.மலையில் இருந்து ஒசூர் நோக்கிச் சென்ற கார் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க போறிங்களா?

அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். இல்லாவிட்டாலும் கல் உப்பாவது வாங்கிவிடுங்கள். ஷேர் பண்ணுங்க.
News April 29, 2025
இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் கைப்பேசி எண்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்-29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.