News October 20, 2025

நாளை முதல் அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. அரசு அறிவிப்பு

image

பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருள்கள் இம்மாதமே வழங்கப்பட உள்ளது. தீபாவளி முடிந்த பிறகு நவம்பருக்கான ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாளை(அக்.21) முதல் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருள்களை விநியோகிக்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. SHARE IT

Similar News

News January 18, 2026

நெல்லை: சுற்றுலாவிற்கு நாளை முதல் தடை!

image

களக்காடு புலிகள் காப்பக வனக்கோட்டத்தில் ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு பணி நாளை துவங்குகிறது. இதனை முன்னிட்டு மலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், சுற்றுலாவிற்கும் நாளை (ஜன 19) முதல் 6 நாட்கள் அனுமதி மறுக்கப்படுகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தலைமையில், மாநில வன துறைகளின் ஒத்துழைப்புடன் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணைந்த புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது.

News January 18, 2026

அல்கொய்தாவின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

image

கடந்த டிசம்பரில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, சிரியாவில் உள்ள <<18825125>>ISIS<<>> அமைப்பின் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கர்கள் மீதான ISIS தாக்குதலுடன் தொடர்புடைய அல்கொய்தா கிளை அமைப்பின் தலைவரை, அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றுள்ளது. கொல்லப்பட்ட பிலால் ஹசன் அல் ஜாசிம், ISIS-ன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

News January 18, 2026

தமிழகத்தில் GI டேக் அங்கீகாரம் பெற்ற பொருள்கள்

image

காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி என்று ஊர் பெயருடன் சேர்த்து சொல்ல காரணம், மற்ற இடங்களை விட இந்த ஊர்களில் அவை தனித்துவமான தரம் & சிறப்புடன் உருவாகின்றன. இந்த பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு (GI) அங்கீகாரத்தை வழங்குகிறது. தமிழகத்தில் 69 பொருள்கள் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த லிஸ்ட்டில் பலரும் அறியாத சிலவற்றை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை இடது புறமாக Swipe செய்து அறிந்து கொள்ளவும்.

error: Content is protected !!