News October 20, 2025
தீபாவளி வாழ்த்து சொன்ன பாக்., பிரதமர்

பாகிஸ்தானில் உள்ள இந்து சமூகத்தினருக்கு, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘இந்த திருநாள் இருளை விலக்கி, ஒற்றுமையை வளர்த்து, அமைதி, அன்பு, அனைவருக்குமான செழிப்பை நோக்கி இட்டுச் செல்லட்டும்’ என்றும், மதநம்பிக்கை, சமூகப் பின்னணி வித்தியாசங்கள் கடந்து அமைதியாக வாழவும், முன்னேற்றத்துக்கு பங்களிக்கவும் இந்நாள் வழிகாட்டட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
Similar News
News March 14, 2026
திருப்பூரில் கேஸ் ஏஜென்சிக்கு சீல்

திருப்பூர் பல்லடம் சாலை வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வணிக இணைப்பு கேஸ் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் நேரில் ஆய்வு செய்து குற்றச்சாட்டை உறுதி செய்த நிலையில் ஏஜென்சிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
News March 14, 2026
பெட்ரோலை கேன்களில் பிடிக்காதீர்.. அரசு எச்சரிக்கை

நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்களிலும் போதுமான அளவு பெட்ரோல், டீசல் இருப்பதாக மத்திய பெட்ரோல் & இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறியுள்ளது. TN-ல் கேன்களில் பெட்ரோல் வாங்கிச் செல்வதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, இதுபோன்ற செயல்கள் ஆபத்தை விளைவிக்கும் என தெரிவித்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பங்க் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், பங்க்குகள் & டீலர்கள் விதிகளை மீறக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.
News March 14, 2026
பழம்பெரும் நடிகை மது காலமானார்

பழம்பெரும் நடிகை மது மல்ஹோத்ரா(72) காலமானார். 80’ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த அவரது கண்ணசைவை காணவே தியேட்டர்களுக்கு படையெடுத்த ரசிகர்கள் ஏராளம். அமிதாப் பச்சனின் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், SATTE PE SATTA, KARZ, VISHWANATH உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


