News April 17, 2024
மயிலாடுதுறை அருகே போலீஸ் குவிப்பு

பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு சீர்காழி அடுத்த புதுப்பட்டினம் காவல்சரகத்தில் வாக்காளர்கள் 100% அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி போலீசாரின் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடைபெற்றது. புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில் காவல் ஆளினர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்று வடபாதி பகுதியிலிருந்து துவங்கி மாதானம் முத்து மாரியம்மன் கோவில் அருகே பேரணியை நிறைவு செய்தனர்.
Similar News
News October 18, 2025
மயிலாடுதுறை மக்களே உஷாரா இருங்க!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
News October 18, 2025
மயிலாடுதுறை: B.E போதும், இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News October 18, 2025
மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி மாணவர் பலி

செம்பனார்கோயில், சாத்தனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன் மகன் நவீன் குமார் (18). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக தனது சட்டையை இஸ்திரி செய்தபோது இஸ்திரி பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.