News October 20, 2025
இயக்குநர் அவதாரம் எடுத்த விஷால்

‘மகுடம்’ படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். இது கட்டாயத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்ற அவர், பொறுப்பின் காரணமாக எடுக்கப்பட்டதே எனவும் கூறியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், முதலீடு செய்யும் தயாரிப்பாளருக்கும் கடமைப்பட்டு, இப்படத்தை நிறைவாக இயக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதன் செகண்ட் லுக் போஸ்டர்கள் ரிலீஸாகியுள்ளன.
Similar News
News March 25, 2026
தொகுதிப்பங்கீடு சர்ச்சைக்கு ஸ்டாலின் பதிலடி

CPM, CPI உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை கிள்ளிக்கொடுத்த திமுக, புதிதாக கூட்டணியில் இணைந்த தேதிமுகவுக்கு 10 தொகுதிகளை அள்ளிக் கொடுத்ததாக விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களை பரப்பிட சிலர் முயற்சி செய்கிறார்கள்; திசைதிருப்ப நினைக்கும் இதுபோன்ற வதந்திகளை திமுகவினர் கொண்டுகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
News March 25, 2026
CINEMA 360: பரதன் On Duty.. மிரட்டும் சூரஜ்!

*தனுஷின் ’கர’ படத்தில் சூரஜ் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது *சிம்புவை அடுத்து அஸ்வத் மாரிமுத்து சூர்யாவை இயக்கலாம் என கூறப்படுகிறது *‘துரந்தர் 2’ படம் 6 நாள்களில் ₹930 கோடி வசூலித்துள்ளதாம் *யாருக்கும் யாரை பற்றியும் கருத்து சொல்ல அருகதை கிடையாது என இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார் *ரோஹித் சர்மா பயோபிக்கில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என நடிகர் சர்வானந்த் தெரிவித்துள்ளார்.
News March 25, 2026
தொகுதிகள் மாறும் 3 முன்னாள் அமைச்சர்கள்

அதிமுக EX அமைச்சர்கள் 3 பேர் தொகுதி மாறுகின்றனர். 2021-ல் விழுப்புரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த சி.வி.சண்முகம், தற்போது மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், 2021-ல் அக்ரி கிருஷ்ணமூத்தி 2021-ல் போளூரில் வெற்றிபெற்ற போதிலும், தற்போது கலசபாக்கம் தொகுதிக்கும், ராஜபாளையம் தொகுதியில் வெறும் 3,708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ராஜேந்திர பாலாஜி, சிவகாசி தொகுதிக்கும் மாறுகின்றனர்.


