News October 20, 2025
ரயில் பயணத்தில் பிரச்னையா.. இந்த App உங்களுக்குத்தான்

உங்கள் ரயில் பயணத்தை பயமின்றி அனுபவிக்க ‘Railmadad’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இதில், கோச் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளை புகாராக பதிவு செய்யலாம். உங்களது லக்கேஜ் தொலைந்தாலோ, சக பயணிகளால் தொந்தரவு ஏற்பட்டாலோ, இதில் ரயில் எண், கோச் & சீட் எண்ணை பதிவு செய்து புகார் தெரிவிக்கலாம். இது 24 மணி நேரமும் செயல்படுகிறது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 21, 2025
முகமது அலியின் பொன்மொழிகள்

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். * என்னைத் தொடர்ந்து இயங்க வைப்பது என் குறிக்கோள்களே.
News October 21, 2025
WORLD ROUNDUP: மெக்சிகோ வெள்ளத்தில் 76 பேர் பலி

*பாகிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற பதிவான லேசான நில அதிர்வு
*ஏமன் கடற்கரையில் எல்பிஜி டேங்கர் வெடித்த நிலையில் 23 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
*ஹமாஸ் ஆயுதங்களை கைவிடும்வரை போர் ஓயாது: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
*மெக்சிகோவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 76-ஆக உயர்வு
*டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் போராட்டம்
News October 21, 2025
டிரம்பின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த ஈரான்

ஈரான் – அமெரிக்கா இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை 5 சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப் மீண்டும் ஈரானை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை ஈரானின் தலைவர் காமேனி நிராகரித்துள்ளார்.