News October 20, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

ஓராண்டில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, இந்த மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI குறைந்துள்ளது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும். SHARE IT.

Similar News

News October 21, 2025

டிரம்பின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த ஈரான்

image

ஈரான் – அமெரிக்கா இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை 5 சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப் மீண்டும் ஈரானை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை ஈரானின் தலைவர் காமேனி நிராகரித்துள்ளார்.

News October 21, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 495
▶குறள்:
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
▶பொருள்:தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.

News October 21, 2025

NATIONAL ROUNDUP: இன்று கேரளா செல்லும் ஜனாதிபதி

image

*சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்
*தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம் உடனடியாக தரையிறக்கம்
*பிஹாரில் முதற்கட்ட தேர்தலில் 61 வேட்பாளர்கள் வாபஸ்
*தீபாவளியையொட்டி டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமடைந்ததால் மக்கள் அவதி
*இன்று கேரளா செல்கிறார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

error: Content is protected !!