News October 20, 2025
கரூர் துயரம்போல் கர்நாடகாவில் ஒரு சம்பவம்

கரூரில் நடந்ததைபோல் கர்நாடகாவில் CM சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. புத்தூர் பகுதியில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,000 பேர் மட்டுமே பிடிக்கக் கூடிய இடத்தில், சுமார் 1 லட்சம் பேர் திரண்டதே நெரிசலுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 27, 2026
விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

மஹாவீர் ஜெயந்தி விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC இணையதளம் (அ) மொபைல் ஆப்பில் டிக்கெட் புக் செய்து உங்கள் பயணத்தை எளிதாக்குங்கள்.
News March 27, 2026
லிவ்-இன் ரிலேஷன் குற்றமல்ல.. கோர்ட் அதிரடி

லிவ்-இன் ரிலேஷனில் உள்ள இருவர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி அலகாபாத் HC-ல் வழக்கு தொடர்ந்தனர். இதன் மீதான விசாரணையில், திருமணமான ஒரு ஆண் வேறொரு வயதுவந்த பெண்ணுடன் லிவ்-இன் ரிலேஷனில் இருப்பது குற்றமல்ல என்று HC தெரிவித்துள்ளது. சமூக கண்ணோட்டத்தில் திருமணமானவர் வேறு பெண்ணுடன் உறவில் இருப்பது குற்றமாக கருதப்பட்டாலும், சட்டம் என்பது வேறு; அறநெறிகள் என்பது வேறு என்றும் HC தெளிவுபடுத்தியுள்ளது.
News March 27, 2026
அதிமுக-பாஜக MLA இடையே டீலிங்.. சுவாரஸ்யம்

2026 தேர்தலுக்காக பாஜக MLA வானதியும் அதிமுக MLA அம்மன் அர்ஜுனனும் சிட்டிங் தொகுதியை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துள்ளனர். 2016-ல் கோவை தெற்கில் வென்ற அர்ஜுனன், 2021-ல் வானதி சீனிவாசனுக்கு அதை விட்டுக்கொடுத்து விட்டு, அவர் வடக்கில் போட்டியிட்டார். ஆனால் இம்முறை கோவை தெற்கிலேயே அர்ஜுனன் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், வானதி வடக்கில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>


