News October 20, 2025

வங்கிக் கணக்கில் ₹2,000 டெபாசிட்… வந்தது அப்டேட்

image

PM கிசான் உதவித்தொகையின் 21-வது தவணையான ₹2,000, தீபாவளிக்கு முன்பாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், பணம் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் பணம் கிரெடிட் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கின் KYC-யை அப்டேட் செய்யாதவர்கள், உடனே அப்டேட் செய்துவிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Similar News

News October 21, 2025

பிஹார் தேர்தலில் இருந்து பின்வாங்கிய ஹேமந்த் சோரன்

image

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், RJD-யுடன் இணைந்து ஜார்கண்ட் CM ஹேமந்த் சோரனின் முக்தி மோச்சா கட்சி இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு சரியாக அமையாததால், தனித்து 6 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக ஹேமந்த் சோரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிஹார் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி சார்ப்பில் திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News October 21, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 21, ஐப்பசி 4 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 8:00 AM – 9:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை

News October 21, 2025

ஹரிஷ் கல்யாணம் படத்துக்கு ஜிவி பாராட்டு

image

‘பைசன்’, ‘டியூட்’ படங்களுடன் தீபாவளி ரேஸில் ஹரிஷ் கல்யாணின் டீசலும் களம் கண்டது. ‘பைசன்’,‘டியூட்’ படங்கள் வசூலை அள்ளி வரும் நிலையில் டீசல் சற்று பின்தங்கியுள்ளது. இந்நிலையில் ‘டீசல்’ படத்தை பார்த்து ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என அவர் பதிவிட்டுள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்ற பெயரை ஹரிஷ் தக்க வைத்துள்ளார்.

error: Content is protected !!