News October 20, 2025

PM மோடி பங்கேற்ற ’Bara Khana’ விருந்து பற்றி தெரியுமா?

image

தீபாவளியையொட்டி கப்பற்படை வீரர்களுடன் கிராண்டான விருந்தில் பங்கேற்றார் PM மோடி. INS விக்ராந்தில் ஆண்டுக்கு ஒரு முறை கப்பற்படை வீரர்கள் அனைவரும் சரிசமமாக அமர்ந்து ‘Bara Khana’ என்ற விருந்தில் பங்கேற்கின்றனர். சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் இந்நிகழ்ச்சியில், கப்பற்படையின் சாதனைகள் பற்றியும் பேசப்படுகிறது. இதில் பங்கேற்ற PM மோடி, தன்னுடன் துணிச்சலான கப்பற்படை வீரர்கள் உள்ளதாக புகழ்ந்தார்.

Similar News

News October 21, 2025

பிஹார் தேர்தலில் இருந்து பின்வாங்கிய ஹேமந்த் சோரன்

image

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், RJD-யுடன் இணைந்து ஜார்கண்ட் CM ஹேமந்த் சோரனின் முக்தி மோச்சா கட்சி இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி பங்கீடு சரியாக அமையாததால், தனித்து 6 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக ஹேமந்த் சோரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிஹார் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சி சார்ப்பில் திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News October 21, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 21, ஐப்பசி 4 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 8:00 AM – 9:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அமாவாசை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை

News October 21, 2025

ஹரிஷ் கல்யாணம் படத்துக்கு ஜிவி பாராட்டு

image

‘பைசன்’, ‘டியூட்’ படங்களுடன் தீபாவளி ரேஸில் ஹரிஷ் கல்யாணின் டீசலும் களம் கண்டது. ‘பைசன்’,‘டியூட்’ படங்கள் வசூலை அள்ளி வரும் நிலையில் டீசல் சற்று பின்தங்கியுள்ளது. இந்நிலையில் ‘டீசல்’ படத்தை பார்த்து ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என அவர் பதிவிட்டுள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்ற பெயரை ஹரிஷ் தக்க வைத்துள்ளார்.

error: Content is protected !!