News October 20, 2025

பட்டாசு கழிவை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது: மாநகராட்சி

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென நேர கட்டுப்பாடு உள்ளது. பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாமல், தனியாக சேகரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டுமென மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News February 21, 2026

FLASH: சென்னையில் 24 வருஷத்துக்கு பிறகு நடக்கும் சம்பவம்!

image

பிப்ரவரி மாதத்தில் பெய்யும் மழை என்பது, பருவம் தவறிய மழையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்திருக்கிறார். அப்படி மழை பெய்தால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சம்பவமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.காலை முதல் சென்னையில் மேகம் மூட்டத்துடன் காணப்படுவது குறிபிடத்தக்கது.

News February 21, 2026

சென்னையில் இளையராஜா சிம்பொனி நிகழ்ச்சி

image

வருகிற மே மாதம் 30ம் தேதி சென்னையில் பிரமாண்டமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். “FROM RAJA WITH LOVE” என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்று நேரலையாக இசைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News February 21, 2026

சென்னை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

சென்னை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!