News October 20, 2025

‘நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு இவர்தான் காரணம்’

image

பெங்களூருவில் ஓலா நிறுவன ஊழியர் அரவிந்த், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் 28 பக்க தற்கொலை கடிதத்தில், ஓலா நிறுவன CEO பவிஷ் அகர்வால், மற்றுமொரு உயரதிகாரி இருவரும் தன்னை டார்ச்சர் செய்ததாலும், சம்பளத்தை இழுத்தடித்ததாலும் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து CEO பவிஷ் மீது FIR போடப்பட்டுள்ளது. அலுவலக டார்ச்சர் இந்த அளவுக்கு இருக்குமா?

Similar News

News October 21, 2025

ஹரிஷ் கல்யாணம் படத்துக்கு ஜிவி பாராட்டு

image

‘பைசன்’, ‘டியூட்’ படங்களுடன் தீபாவளி ரேஸில் ஹரிஷ் கல்யாணின் டீசலும் களம் கண்டது. ‘பைசன்’,‘டியூட்’ படங்கள் வசூலை அள்ளி வரும் நிலையில் டீசல் சற்று பின்தங்கியுள்ளது. இந்நிலையில் ‘டீசல்’ படத்தை பார்த்து ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என அவர் பதிவிட்டுள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்ற பெயரை ஹரிஷ் தக்க வைத்துள்ளார்.

News October 21, 2025

உடம்பை இரும்பாக்கும் விதைகள்.. நோட் பண்ணுங்க பா!

image

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மட்டுமே பலர் சாப்பிடுவார்கள். ஆனால், Healthy Diet-க்கு சில விதைகளும் முக்கியமானதாக இருக்கிறது. இந்த விதைகள், ரத்த அழுத்தத்தை குறைப்பதில் இருந்து புற்றுநோயை கூட வராமல் தடுக்குமாம். அப்படி மனிதனுக்கு அருமருந்தாகும் விதைகள் குறித்தும் அதன் பலன்கள் பற்றியும் போடோக்களை மேலே SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். SHARE.

News October 21, 2025

‘கட்டா குஸ்தி’ தாக்கத்தை ஏற்படுத்தியது: விஷ்ணு விஷால்

image

ராட்சசனைவிட, கட்டா குஸ்திதான் தன்னை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். OTT தளத்தின் வளர்ச்சியால் ‘கட்டா குஸ்தி’ அனைத்து தரப்பு மக்களிடம் சென்று சேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தனது அடுத்த படமான ’ஆர்யன்’ மக்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என நம்பிக்கையுடன் உள்ள அவர், அதனால் தனது மகனின் பேயரை(ஆர்யன்) படத்திற்கு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!