News October 20, 2025
தனி மனிதரை திருப்திப்படுத்த முடியாது: மாரி செல்வராஜ்

தென் மாவட்டங்களை பற்றிய பொதுவான Narrative-ஐ மாற்றுவதே எனது நோக்கம் என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘பைசன்’ உள்பட அவரது அனைத்து படங்களும் தென் பகுதிகளில் சாதிய மோதலை தூண்டுவதாக உள்ளது என ஹரி நாடார் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒவ்வொரு தனி மனிதரையும் என்னால் திருப்திபடுத்த முடியாது என்றார். ‘மாரி செல்வராஜ் ஒரு சாதிய எதிர்ப்பாளர்’ என்ற முத்திரையே குத்தப்படும் என்றும் கூறினார்.
Similar News
News January 16, 2026
கரூரில் திமுக முக்கிய புள்ளி காலமானார்!

கரூர் மாவட்டம், கடவூர் வடக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் கன்னியப்பன் இன்று இயற்கை எய்தினார். இச்செய்தியை அறிந்த கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி எம்.எல்.ஏ, மறைந்த கன்னியப்பன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இதே போல் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
News January 16, 2026
ஜம்மு-காஷ்மீரின் எல்லை பகுதிகளில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், சாம்பா மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதிகளில், பாக்., ட்ரோன்கள் மீண்டும் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ட்ரோன் ஊடுருவல் குறித்து <<18852930>>இந்திய ராணுவம்<<>>, சில நாள்களுக்கு முன்புதான் பாக்.-ஐ எச்சரித்தது. இந்நிலையில், மீண்டும் ட்ரோன்கள் பறந்ததால், அவற்றை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
News January 16, 2026
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவின் கை ஓங்கியதா?

மும்பை, புனே உள்பட மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை மாநகராட்சியில் (BMC) பாஜக தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி 88 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. தாக்கரே சகோதரர்கள் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். மும்பை மட்டுமல்லாமல் மீதமுள்ள 28 மாநகராட்சிகளிலும், ‘மஹாயுதி’ கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.


