News October 20, 2025
ராமநாதபுரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 20, 2025
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடி உயர்ந்ததால் இன்று உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
ராம்நாடு: பேருந்தில் பயணிப்போர் கவனத்திற்கு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நாம் பலரும் சொந்தகாரர்கள் வீடுகள் மற்றும் நாளை பணி திரும்ப செல்வோர் அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க!
News October 20, 2025
ராம்நாடு மக்களே இனி அலைச்சல் இல்லை.!

ராம்நாடு மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!