News October 20, 2025

இதுதான் சூர்யாவின் பயங்கர மாஸ்: RJ பாலாஜி!

image

‘சூரரை போற்று’, ‘ஜெய்பீம்’ போன்ற தரமான படங்களை கொடுத்தாலும், மாஸ் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு நீண்ட நாள்களாகவே சூர்யா தீனி போடவில்லை. அந்த குறையை ‘கருப்பு’ படம் தீர்த்து வைக்கும் போலும். ‘சிங்கம் 2’ படத்துக்கு பின், ‘கருப்பு’ படத்தில்தான் பயங்கர மாஸாக சூர்யா நடித்திருப்பதாக கூறிய அவர், படத்தின் விஷுவலும் சூர்யாவின் நடிப்பும் மிகவும் தன்னை ஈர்த்ததாகவும் RJ பாலாஜி தெரிவித்துள்ளார். கருப்பு நெருப்பாகுமா?

Similar News

News October 20, 2025

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர இதை பண்ணுங்க

image

சர்க்கரை நோயை மருந்து மாத்திரைகள் மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. அதற்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். குறைவான கிளைசெமிக் எண் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், நீண்ட கால ஆரோக்கியத்தையும் பெறலாம். அந்த வகையில், நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை மேலே போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

News October 20, 2025

தீபாவளியன்று அயராத பணியில் நல் உள்ளங்கள்

image

தீபாவளி பண்டிகையை நாமெல்லாம் உற்சாகத்துடன் கொண்டாடும் வேளையில், குறிப்பிட்ட சில துறையை சேர்ந்தவர்கள் விடுப்பின்றி பணி செய்கின்றனர். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போலீஸ், தீயணைப்பு துறையினர் இன்று அர்ப்பணிப்போடு கடமையை செய்து வருகின்றனர். நமக்காக பணியாற்றும் இந்த நல் உள்ளங்களுக்காக லைக் போட்டு நன்றி தெரிவிக்கலாமே.

News October 20, 2025

நாளை முதல் அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. அரசு அறிவிப்பு

image

பருவமழை தொடங்கியுள்ளதால், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருள்கள் இம்மாதமே வழங்கப்பட உள்ளது. தீபாவளி முடிந்த பிறகு நவம்பருக்கான ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாளை(அக்.21) முதல் அடுத்த மாதத்திற்கான ரேஷன் பொருள்களை விநியோகிக்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. SHARE IT

error: Content is protected !!