News October 20, 2025
₹66 கோடி வசூலித்த ‘டியூட்’

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ உலகளவில் மூன்றே நாள்களில் ₹66 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும், தீபாவளி விடுமுறை காரணமாக வசூல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதே நிலை நீடித்தால் ‘டியூட்’ ₹100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க ‘டியூட்’ பார்த்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?
Similar News
News March 28, 2026
CINEMA 360°: SK-க்கு தங்கையாக மாளவிகா மனோஜ்?

▶ SK-க்கு தங்கையாக மாளவிகா மனோஜ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.
▶ ‘தி டார்ம்’ படத்தில் முனிஷ்கான் கதை நாயகனாக களமிறங்குகிறார்.
▶ ‘யூத்’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ₹28 கோடி வசூல் செய்துள்ளதாம்.
▶ தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
News March 28, 2026
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரானின் அராக் கனநீர் அணு உலை மற்றும் அர்தகான் யுரேனியம் ஆலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான முக்கிய உள்கட்டமைப்புகளை அழிப்பதே இதன் நோக்கம் என்று இஸ்ரேல் கூறியது. இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகளோ அல்லது கதிர்வீச்சு அபாயங்களோ இல்லை என்று ஈரான் தெரிவித்த ஈரான், இதற்கு பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
News March 28, 2026
பர்கர் நிறுவன ஊழியர்களுக்கு ₹15 கோடி போனஸ்!

அமெரிக்க பர்கர் நிறுவனமான Five Guys, தனது ஊழியர்களுக்கு ₹15 கோடி போனஸ் அறிவித்துள்ளது. தனது 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 17-ல் அறிவிக்கப்பட்ட ‘But One Get One Free’ சலுகைக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. அப்போது ஏற்பட்ட கூட்டத்தால் சரக்கு பற்றாக்குறை, ஆன்லைன் சேவைகள் முடங்குதல் போன்ற சவால்கள் ஏற்பட்டன. இருப்பினும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 1,500 ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


