News October 20, 2025
தீபாவளி விடுமுறை.. புதன் கிழமையும் வந்தது அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, ஊர் திரும்ப ஏதுவாக புதன்கிழமையும் (அக்.22) சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்லையிலிருந்து இரவு 11:55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், சென்னைக்கு அடுத்த நாள் காலை 10:55 மணிக்கு வந்துசேரும். மறுமார்க்கத்தில் அக்.23 பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12:05 மணிக்கு நெல்லை சென்றடையும்.
Similar News
News March 12, 2026
Induction Stove-வுக்கு அதிகரித்த டிமாண்ட்.. No Stock!

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையை அடுத்து, இண்டக்ஷன் ஸ்டவ் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிளிங்கிட், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் 2-3 நாட்களாக ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பிளிப்கார்ட்டில் மட்டும் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. பல தளங்களில் இப்போது இண்டக்ஷன் ஸ்டவ் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளிலும் இதே நிலைதான் உள்ளதாம்.
News March 12, 2026
அடுத்து இந்த பொருளுக்குதான் தட்டுப்பாடு வரப்போகுது!

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், விரைவில் உர விநியோகத்திலும் தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவின் உர தேவையில் 20- 25% ஹார்முஸ் கடல் பாதை வழியாகதான் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, நைட்ரஜன் உரங்களில் 63%, பொட்டாஷ் உரங்களில் 42% மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் வருகிறதாம். இருப்பினும், தற்போது போதுமான அளவு உரக் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News March 12, 2026
தமிழக தேர்தல் தேதி எப்போது?.. வெளியான அப்டேட்

தமிழக தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், வருகிற ஞாயிற்றுக் கிழமையன்று 5 மாநில தேர்தல் தேதிகளை ECI அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருப்பதாகவும், ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நாளாக இருக்கும் எனவும் ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்களே ரெடியா!


