News October 20, 2025
குமரி: மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை

தக்கலை அருகே ஆற்றுக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் சரியாக வேலைக்குச் செல்லவில்லை. மனைவியிடம் குடிக்க பணம் கேட்ட நிலையில், அவர் கொடுக்காததால் வீட்டில் மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News October 20, 2025
வெள்ளிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா அறிவிப்பு

வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை மறுநாள்(அக்.22) கொடியேற்றத்துடன் தொடங்கி அக்.27 வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் முதல் நாள் காப்பு கட்டு நிகழ்ச்சியும், கொடியேற்றமும் நடக்கிறது. அக்.27 அன்று மாலை 6:15 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு சாமி மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்
News October 20, 2025
குமரி மக்களே இனி அலைச்சல் இல்லை.!

குமரி மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!
News October 20, 2025
கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்

குமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையினால் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.