News October 20, 2025
ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சி திருநாள்: கமல்

தீபாவளியை ஒட்டி அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகரும், MP-யுமான கமல்ஹாசன். அவரது எக்ஸ் பதிவில், ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்; வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள்; தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக; தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
தமிழகத்தில் வியப்பூட்டும் விநோத நேர்த்திக்கடன்கள்

தீபாவளி, பொங்கல் என உலகமே கொண்டாடும் பண்டிகைகளை நாம் கொண்டாடும் அதேவேளையில், உள்ளூர் கோயில் திருவிழாக்களையும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறோம். இந்த திருவிழாக்களில் நாம் நினைத்தது நிறைவேறினாலோ (அ) நிறைவேறவோ வேண்டி நேர்த்திக்கடன்களை செலுத்துகிறோம். இவ்வாறு வித்தியாசமான முறையில் செலுத்தும் நேர்த்திக்கடன்களை மேலே swipe செய்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த விநோத வழிபாடுகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News October 20, 2025
‘நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு இவர்தான் காரணம்’

பெங்களூருவில் ஓலா நிறுவன ஊழியர் அரவிந்த், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் 28 பக்க தற்கொலை கடிதத்தில், ஓலா நிறுவன CEO பவிஷ் அகர்வால், மற்றுமொரு உயரதிகாரி இருவரும் தன்னை டார்ச்சர் செய்ததாலும், சம்பளத்தை இழுத்தடித்ததாலும் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து CEO பவிஷ் மீது FIR போடப்பட்டுள்ளது. அலுவலக டார்ச்சர் இந்த அளவுக்கு இருக்குமா?
News October 20, 2025
நண்பனுக்காக கனவை விட்டுக்கொடுத்த வருண்

நடுத்தர குடும்பத்திலிருந்து முன்னேறி செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒருசில விலையுயர்ந்த பொருள்களை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த ஆசையில் தான் ₹3 லட்சம் மதிப்பிலான வாட்ச்சை வருண் சக்கரவர்த்தி வாங்கியுள்ளார். ஆனால், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் தனது நண்பர்கள் மத்தியில் இந்த வாட்ச்சை அணிவது, தனக்கு சங்கடத்தை தருவதாக வருந்தியுள்ளார். வருணின் ஃபீலிங் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?