News October 20, 2025
மதுரை: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

மதுரை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 20, 2025
மதுரை வழி திருநெல்வேலி – சென்னை சிறப்பு ரயில் அறிவிப்பு

தீபாவளி முடிந்து சென்னை திரும்ப நாளை மறுநாள் திருநெல்வேலி – எழும்பூர் சிறப்பு அதிவேக ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 22 ம் தேதி இரவு 11.55 க்கு நெல்லையிலிருந்து கிளம்பி மறுநாள் காலை 10.55 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் விருதுநகர்,மதுரை, திண்டுக்கல் , திருச்சி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 20, 2025
மதுரை வைகை ஆற்றில் குளித்த மாணவர் பலி

மதுரை மாவட்டம் சிலைமான் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவர் சஞ்சீவ்ராஜ் 19 இவர் துக்ளாபட்டி பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளித்த போது திடீரென நீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர் உடற்கூறாய்வுக்கு உடலை அனுப்பிவைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 20, 2025
மதுரையில் சிறுமி கர்ப்பம்-சிறுவன் கைது

மதுரை கள்ளிக்குடி அரசபட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமி கர்பமடைந்துள்ளார். தகவல் அறிந்த ஊர் நல அலுவலர் ஆவுடையம்மாள் புகாரில் திருமங்கலம் மகளிர் போலீசார் 17 வயது சிறுவனையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.